விஜய்-அட்லீ படப் பெயர் மாறியதற்கு தனுஷ், ஜீவா தான் காரணமா?

Bookmark and Share

விஜய்-அட்லீ படப் பெயர் மாறியதற்கு தனுஷ், ஜீவா தான் காரணமா?

அட்லி-விஜய் படத் தலைப்பு பெரும் பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதனால் படத்துக்கு முதலில் மூன்றுமுகம் என்று பெயர் வைக்க முடிவு செய்தார்களாம். ரஜினி படத்தின் பெயர் என்பதால் அந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனத்திடம் அந்தப்பெயரை வாங்கப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.

பெயரை வாங்கிவிட்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்போது திடீரென காக்கி என்றொரு பெயரை வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி படப்பெயர் படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துத் தான் வாங்கினார்களாம். பிறகு ஏன் இந்த மாற்றம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னரே பாபிசிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு “வீரா” என்ற பெயரும், தற்பொழுது ஜீவா நடிக்கும் ஒரு படத்துக்கு “போக்கிரிராஜா” என்றும் அண்மையில் தனுஷ் படத்துக்கு “தங்கமகன்” என்றும் ரஜினி படப்பெயர்களை வைத்துவிட்டார்கள்.

எனவே, விஜய் படத்துக்கும் ரஜினி படப்பெயரை அறிவித்தால் கேலிக்குள்ளாக நேரிடும் என்று நினைத்தே வேறு பெயருக்கு மாறிவிட்டார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions