வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்

Bookmark and Share

வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்

தாம் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், ஒருபோதும் வரி ஏய்ப்பு செய்ததில்லை என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று.

கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர், நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே, உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 


Post your comment

Related News
அவர் நடிக்கட்டும்-அஜித், அவர் குரலை கேட்க வேண்டும்-விஜய், தலதளபதியே அசர வைத்த அந்த நடிகர் யார் தெரியுமா?
விஜய்யின் 24-வருட திரைப்பயணம்: விழாவாக கொண்டாடும் ரசிகர்கள்
விஜய் மகளுக்கு குரல் கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரண உதவி
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
விஜய்யின் மனசு யாருக்கு வரும்...விஜய்யை பார்த்து வியந்த பெண்
விஜய்60 பட இயக்குனர் குறித்து திடீர் ட்விஸ்ட் வைத்த விஜய்
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions