விஜய்யை தொடர்ந்து விஷாலுடன் மோதும் ஜெகபதி பாபு!

Bookmark and Share

விஜய்யை தொடர்ந்து விஷாலுடன் மோதும் ஜெகபதி பாபு!

பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு. இவர் தமிழில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்யை தொடர்ந்து அடுத்ததாக விஷாலுடனும் மோத இருக்கிறார் ஜெகபதி பாபு. ‘மருது’ படத்தை முடித்து விட்டு விஷால் அடுத்ததாக ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் விஷாலுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிவந்த நிலையில், தற்போது ஜெகபதி பாபுவை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மற்ற படங்களில் வரும் வில்லன் போல் இல்லாமல் இந்த படத்தில் ஜெகபதி பாபுவை வித்தியாசமான வில்லனாக காண்பிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions