நீங்க கூட சமூக விரோதி... மீண்டும் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த விஜயகாந்த்

Bookmark and Share

நீங்க கூட சமூக விரோதி... மீண்டும் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த விஜயகாந்த்

என்னுடையய பார்வையில் நீங்க கூட சமூகவிரோதிதான் என பத்திரிகையாளர்களை மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்டகாலம் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தார். தமிழகமே கொந்தளித்து போராடிய போதுகூட அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு அமைதியாக இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உங்களுடன் நான் என தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறார் விஜயகாந்த். இந்த நிலையில் சென்னை திரும்பிய விஜயகாந்த், போலீசார் வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தை நேற்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ஜெயக்குமார் வந்து என்ன நிவாரணம் சொல்லியிருக்கிறார் சொல்லுங்க பார்ப்போம்? அவருதானே மீன் வளத்துறை அமைச்சராக இருக்கிறார் இல்ல.. அவரு என்ன சொன்னாருன்னு நீங்க சொன்னாதான் நானும் சொல்ல முடியும். அரசாங்க என்ன சொல்லுச்சு சொல்லுங்க.. அதைக் கேட்டா உங்களுக்கே தெரியலையே என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், யார் திருடன்? யார் குற்றவாளின்னு போலீசாருக்கு தெரியாதா? சும்மா பொத்தாம் பொதுவா எல்லாரையுமே நீங்க கைது பண்ண கூடாது... நான் என்ன சொல்றேன்..... யாரு சமூக விரோத கும்பல்னு போலீஸ்காரங்களுக்கு தெரியாமலா இருக்கும்? என்றார்.
மேலும் போலீசார் தடியடி தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன..உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, என்னுடைய நிலைப்பாடு போகப் போகத்தான் தெரியும் என்றார் விஜயகாந்த்.
அத்துடன் 'உங்கள் பார்வையில் யார் சமூகவிரோதி' என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சார் என் பார்வைன்னு எதுக்காக கேட்கிறீங்க.. என் பார்வையில நீங்க கூட சமூகவிரோதி அப்படிப் பார்த்தா.. போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு சொல்லனும்.. என் பார்வை..என் பார்வைன்னா போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு சொல்லனும் என்றார் விஜயகாந்த்.


Post your comment





Related News
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions