பிரபல நடிகையிடம் ஹாய் சொல்ல நீண்ட நேரம் காத்திருந்த விஜய் – இதுவரை வெளிவராத தகவல்!

Bookmark and Share

பிரபல நடிகையிடம் ஹாய் சொல்ல நீண்ட நேரம் காத்திருந்த விஜய் – இதுவரை வெளிவராத தகவல்!

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார்.

எவருடனும் அவ்வளவு எளிதில் சகஜமாக பேசிவிட மாட்டார். இந்நிலையில் விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட படப்பிடிப்பு அனுபவத்தை பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இருவரும் கோலா விளம்பரத்தில் 2000-த்தின் தொடக்கத்தில் நடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசிய கத்ரினா, “ஷுட் முடிந்து நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தோம். நான் ஃபோன் உபயோகித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் முன்னே யரோ வந்து நின்றனர். அவருடைய கால்களை நான் பார்த்தேன். ஆனால் அவர் யார் என்று பார்க்காமல் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில நேரம் ஆகியும் அந்த நபர் அங்கேயே நின்று கொண்டிருந்தால் யார் என்று பார்த்தேன். 

அப்போது தான் அது விஜய் என தெரிந்தது. ஷுட் முடிந்ததால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் ஃபோனில் பிசியாக இருந்ததால் என்னை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தார்’ என்று கூறியுள்ளார் கத்ரினா. 


Post your comment

Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions