தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?

Bookmark and Share

தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கபோவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படம் முடிந்ததும் செல்வராகவன் படத்திலும் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாம். அண்மையில் செல்வராகவன் விஜய்யை சந்தித்து வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் கதையை சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions