ரசிகர்களின் வரவேற்பில் விஜய் சேதுபதியின் மெல்லிசை!

Bookmark and Share

ரசிகர்களின் வரவேற்பில் விஜய் சேதுபதியின் மெல்லிசை!

சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய்சேதுபதி படங்கள் ஆரம்பத்தில் வெற்றியடைந்து வந்தது. அதன்பின் வெளியான ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘வன்மம்’, சமீபத்தில் வெளியான ‘புறம்போக்கு’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை.

இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நானும் ரௌடிதான்’, ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு மேண்டும் வெற்றிப்படங்களாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி-காயத்ரி இணைந்து நடித்திருக்கும் ‘மெல்லிசை’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியிருக்கிறார். சாம் இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions