பழைய நண்பர்களை தேடிச்சென்று உதவி செய்யும் விஜய் சேதுபதி !

Bookmark and Share

பழைய நண்பர்களை தேடிச்சென்று உதவி செய்யும் விஜய் சேதுபதி !

சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்போது ஹீரோக்களாக இருந்து வரும் விஜயசேதுபதி, விதார்த், விமல், சூரி உள்பட பல நண்பர்கள் சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டுடியோவிற்கு அருகில் உள்ள ஒரு அறை மட்டுமே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.

காலையில் அங்கிருந்து இரைதேடும் பறவைகளாக வெளியேறுபவர்கள் இரவுதான் அந்த தங்கும் அறைக்கு செல்வார்களாம். ஒருகட்டத்தில் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தபோது அந்த அறையில் இருந்து வெளியேறி வெவ்வேறு வீடுகளில் குடியேறியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படி அவர்கள் தங்கியிருந்த அறையில் இப்போதும் அவர்களின் சில பழைய நண்பர்கள் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு சினிமாவில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை.

இந்த விசயத்தை அறிந்த விஜயசேதுபதி, சமீபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த தனது முன்னாள் நண்பர் ஒருவரை அழைத்து நலம் விசாரித்தாராம். அப்போது அந்த நபர், அவரை சார் சார் என்று பேசினாராம்.

அதற்கு டேய் என்னடா என்னைப்போய் சாரு மோருன்னு சொல்லிக்கிட்டு எப்பவும் போல மச்சின்னு சொல்லுடா மச்சி என்றாராம் விஜயசேதுபதி. இன்றைக்கு ஒரு பெரிய நடிகராக வளர்ந்துவிட்டபோதும் பழசை மறக்காமல் விஜயசேதுபதி பேசியதைக்கேட்ட அந்த நண்பரின் கண்கள் கலங்கி விட்டதாம். அதையடுத்து அந்த நண்பரை தனது அலுவலகத்துக்கு அழைத்து சென்றதோடு பட வாய்ப்பும் வாங்கிக்கொடுத்துள்ளாராம் விஜயசேதுபதி.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions