விஜய் சேதுபதிக்கு நான்கு ஹீரோயின்கள்

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு நான்கு ஹீரோயின்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நான்கு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் முதல் கதாநாயகியாக தமன்னா, இரண்டாவதாக ‘மேகா’ படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவை தேர்வு செய்திருந்தனர். அடுத்தபடியாக மூன்றாவது கதாநாயகியை தேடிவந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும், நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா நாயரும் தேர்வு செய்திருக்கிறார்கள். மொத்தம் நான்கு ஹீரோயின்களை கொண்டு ‘தர்மதுரை’ உருவாகவுள்ளது.

இப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படம் மூலம் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். 


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions