விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் நாயகன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு, ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன், தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தலைப்பும் வைத்துவிட்டார்கள். படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

தலைப்பில் ரெண்டு காதல் என்று வந்துள்ளதால், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. எனவே, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றிநடை போடுவதால், இப்படத்தில் அவருக்கு முன்னணி நாயகிகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் நடித்த நயன்தாராவை இப்படத்தில் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்தனர். இரண்டாவது ஹீரோயினாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

அவர் முதலில் இதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. தற்போது, திரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஒரே படத்தில் நயன்தாரா, திரிஷா என முன்னணி நாயகிகளுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதிக்கு கண்டிப்பாக அதிர்ஷ்ட மழை என்றுதான் கூறவேண்டும். 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions