தளபதியின் பலம்-பலவீனம்!

Bookmark and Share

தளபதியின் பலம்-பலவீனம்!

விஜய் சிறுவயதிலேயே திரைதுறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடித்து, ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

இதுவரை இவரது 3 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசுல் செய்துள்ளது. தமிழ் வெளியீட்டில் மட்டும் துப்பாக்கி படம் 192 கோடியும், கத்தி- 183கோடியும் வசூலித்துள்ளது. நண்பன்- 100 கோடிக்கு மேல் (தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடு) வசூலித்துள்ளது.

இதுவரை விஜய் 28 பாடல் பாடியுள்ளார், அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. 6 விஜய் டீவி விருதுகள். 1 டாக்டர் பட்டம்.. 2 அடுத்த சூப்பர் ஸ்டார் விருது.. 1 கலைமாமணி விருது என இன்னும் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

திரைத்துறையில் சிறந்த Actor, Dancer, Fighter, Singer, Best Dialogue Deliver, Humour Sense, Etc என்று புகழப்படுபவர். இவர் எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.

தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, நடிகைகளுடன் கூத்து என்றெல்லாம் இருப்பவர் அல்ல. இதனாலேயே திரைத்துறையில் சில நடிகர் / நடிகைகளுக்கு இவரை பிடிக்காது.

ஆனால் உண்மையாக ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் தானாகவே சென்று உதவி செய்யும் மனப்பான்மை உடையவர். ஜீவா சமீபத்தில் சொன்னது போல் படப்பிடிப்பில் குடை பிடிப்பது முதல் வீட்டில் சிறு சிறு வேலை செய்வதாகட்டும் இவரே செய்துவிடுவாராம். மற்றவரை தொந்தரவு செய்ய மிகவும் யோசிக்க கூடியவர்.

தன்னை பற்றி வெளி வரும் போலி விமர்சனகளை சற்றும் கண்டுகொள்ளமாட்டார் . யாரிடமும் அதிகம் கோவம் காட்டமாட்டார். பெரியவர்களிடம் அதிக மரியாதை கொண்டவர். அரசியல் வாதிகள் இவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடு பட்டு உருவாக்கும் ஒவ்வொரு நாடகத்துக்கும் அனைவரும் இவரையே விமர்சனம் செய்வார்கள்.

இப்படி பல இடையூறுகள் வந்தாலும் தனது தன்னம்பிக்கை, தன் ரசிகர்களின் அன்பு என்றைக்குமே மறவாதவர். சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பலரையும் வாழவைத்தவர்.

300 க்கும் மேற்பட்ட மாணவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கிறார். தான் மட்டும் அல்லாமல் தன்னுடைய ரசிகனும் உயர வேண்டும், முன்னேற வேண்டும், நல்ல செயல்களில் ஈடு பட வேண்டும், சமூக அக்கறை கொள்ள வேண்டும் என்று தன் ரசிகர்களை நல்ல பாதையில் தன்னோடு கை கோர்த்து அழைத்து செல்லும் நல்ல மனம் உடையவர்.

உண்மையை சொன்னால் விஜய் தனது ரசிகர்களாலேயே நிறைய பிரச்சனையில் சிக்கியுள்ளார். எனினும் இதுவரை அவர் தனது ரசிகர்களை ஒரு வார்த்தை கூட மனம் புண்படும் படி பேசியதில்லை, அந்த அளவுக்கு ரசிகர் மேல் அன்பு கொண்டவர். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் துள்ளி கூட கர்வம் இல்லாதவர்.


Post your comment

Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions