பேஸ்புக்கில் காதல் செய்யும் விஜய்வசந்த்!

Bookmark and Share

பேஸ்புக்கில் காதல் செய்யும் விஜய்வசந்த்!

மதில்மேல் பூனைக்கு பிறகு விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதையடுத்து நடித்த தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் படம் ப்ளாப் ஆகி விட்டது. இருப்பினும், அதன்பிறகு வித்தியாசமான கதைகளாக கேட்ட அவர், நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜிகினா என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் வசந்த் பல காதல் கதைகளில் நடித்தபோது இந்த படத்தில் பேஸ்புக்கில் ஒரு பெண்ணை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு பேஸ்புக் காதலர்கள் பற்றிய பல படங்கள் வந்திருந்தபோதும். இந்த படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம்.

குறிப்பாக, பேஸ்புக்கில் இரண்டு பேர் காதலிப்பார்களாம். ஆனால், அவர்கள் இணைய பக்கத்தில் தங்களது போட்டோவை இணைக்காமல் வேறு நபரின் போட்டோவை இணைத்து காதலிப்பார்களாம்.

இதையடுத்து அந்த போட்டோவில் இருப்பது நானல்ல என்று அவர்கள் சொல்லும்போது ஏற்படும் குழப்பங்கள்தான் இந்த படமாம். இந்த ஆள் மாறாட்டத்திற்கு பிறகு அவர்களுக்குள் இருக்கும் நிஜமான காதல்தான அவர்களை ஒன்று சேர்க்கிறதாம். இதை மிக உயிரோட்டமாக படமாக்கியிருக்கிறாராம் நந்தா பெரியசாமி.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions