விஜய்யை மாற்றிய மனதை உருக்கும் நிகழ்வு

Bookmark and Share

விஜய்யை மாற்றிய மனதை உருக்கும் நிகழ்வு

இந்திய நடிகர்களில் பலர் பெண்கள் மத்தியில் ரொமாண்டிக் நாயகனாக வலம் வந்திருக்கலாம். ஆனால், ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து பெண்களும் “அண்ணா” என்று உரிமையாக அழைக்கும் ஒரே இந்திய நடிகர் விஜய்யாக மட்டுமே இருக்க முடியும்.

இதற்கு காரணம் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு தான். விஜய்க்கு வித்யா என்ற செல்லமான தங்கை இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அவரது இழப்பு விஜய்யை பெருமளவில் பாதித்திருந்தது.

விஜய் இப்போது இருப்பது போல் சிறு வயதில் அமைதியாக இல்லையாம். மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவெனவும் தான் இருந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட தங்கை வித்தியாவின் மரணம் தான் இவரது சுபாவம் அமைதியாக மாற ஓர் காரணமாக அமைந்துவிட்டதாம்.

தன்னோடு தினமும் விளையாடிக் கொண்டிருந்த அன்பு தங்கை திடீரென மரணம் அடைந்தது மனதளவில் விஜய்யை பெரிதாக பாதித்துவிட்டதாம். தற்போது இவர் தனது தங்கையின் பெயரில் வித்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பெரும்பாலும் விஜய் யாருக்கும் தெரியாமல் கல்வி உதவி செய்வதெல்லாம் இந்த வித்யா அறக்கட்டளை மூலமாக தான் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions