ஆதித்யாராம் ஸ்டூடியோவில் விஜய்59 படப்பிடிப்பு மும்முரம்

Bookmark and Share

ஆதித்யாராம் ஸ்டூடியோவில் விஜய்59 படப்பிடிப்பு மும்முரம்

விஜய்யின் 59வது படத்தை அட்லி இயக்குகிறார். சமந்தா, எமிஜாக்சன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தைக் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.  ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப் படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள ஹவுசில் நடந்தது.  

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டூடியோவில் இந்தப் படத்திற்காக பிரமாண்ட வீடு செட் போடப்பட்டு படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் விஜய், சமந்தாவுடன், ராதிகா சரத்குமார், பிரபு, நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், ஆகியோர் நடித்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பை முழுதும் இங்குதான் நடக்கிறது.இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது.

இந்திய அரசின் உளவுப்பிரிவு அதிகாரி விஜய். நாட்டுக்கு வரும் பல ஆபத்துக்களை தன் புத்தி சாதுர்யத்தால் முறியடித்தவர். அவர் இருக்கிற வரை தங்களால் எதுவும் செய்ய முடியாது என கருதும் சர்வதேச கும்பல் தனது திருமணத்திற்காகவும், விடுமுறையை கழிக்கவும் தன் சொந்த ஊருக்கு வந்திருக்கும் விஜய்யை தீர்த்துக்கட்ட வருகிறது.

எதிர்ப்பு எந்த ரூபத்தில் எப்படி வருகிறது என்பது தெரியாதெனினும் தன் குடும்பத்தை சுற்றி ஆபத்து சூழ்ந்திருப்பதை உணர்ந்து கொள்ளும் விஜய் தன் குடும்பத்திற்குத் தெரியாமலும்,அவர்களுக்கு துன்பம் எதுவும் வந்து விடாமலும் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள் படக்குழுவினர்.


Post your comment





Related News
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions