விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?

Bookmark and Share

விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது.லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.இந்நிலையில் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஷங்கர் தொடங்கிவிட்டார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 

இதைதொடர்ந்து ஷங்கர் இதற்கு பதிலாக விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கபோவதாக சமூக வலைதளங்களில் நேற்று காலையில் இருந்து ஒரு செய்தி பரவி வருகிறது. 

ஆனால் ஷங்கர் தரப்பை விசாரித்தபோது இதை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் ஷங்கரின் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
கேரளாவில் ரசிகர்கள் முன்பு விஜய் ஸ்டைலில் பேசிய விக்ரம்!
முதல்முறையாக ஒரே நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் விஜய், விக்ரம் பிரபு!
மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !
வேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி?
விஜய்-விக்ரமுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்
விஜய், விக்ரமை துரத்தும் ஷங்கரின் உதவியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions