ரசிகரை நெகிழ்ச்சி அடைய வைத்த விக்ரமின் வைரல் வீடியோ

Bookmark and Share

ரசிகரை நெகிழ்ச்சி அடைய வைத்த விக்ரமின் வைரல் வீடியோ

சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவரிடம் விக்ரம் நடந்துகொண்ட பணிவு, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 

அதாவது, விழா மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விக்ரமை காண ரசிகர் ஒருவர் பாய்ந்தோடி வந்து, விக்ரமை கட்டித்தழுவி அவரை அரவணைத்துக் கொண்டார்.

ரசிகரின் இந்த செயலை விக்ரம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விக்ரமிடம் இருந்து பிரித்து, அவரை ஆவேசத்துடன் கீழே தள்ளிவிட்டனர்.

ஆனால், உடனே விக்ரம் எழுந்துவந்து அந்த ரசிகரை ஏதும் செய்யாதீர்கள் என்று பாதுகாவலர்களை விலக்கிவிட்டு, அவரை தன்னுடன் அழைத்து அவர் விருப்பத்தை கேட்டார்.

ரசிகரும், விக்ரமுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தனது ஆசையை அவரிடம் கூற, விக்ரமும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள செல்போனை முன்னோக்கி எடுத்தார்.

ஆனால், செல்பி வேண்டாம் என்று ரசிகர் சைகை செய்ய, அருகிலிருந்தவரிடம் செல்போனை கொடுத்து விக்ரமை கட்டியணைத்தவாறு அந்த ரசிகர் போட்டோ எடுத்துக்கொண்டார்.

பின்னர் அந்த ரசிகர் விக்ரமை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது எல்லாவற்றையும் விக்ரம் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்த ரசிகர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்துக்கு சென்றாலும் ஒரு ரசிகனின் சின்ன ஆசையை நிறைவேற்றிய விக்ரமை அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கரகோசம் எழுப்பி மனதார பாரட்டினார்கள்.

விக்ரமின் இந்த பணிவுதான் அவரை இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோ இதோ...


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions