அக்‌ஷய் குமார் மற்றும் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து தொழில் தொடங்கிய விக்ரம்

Bookmark and Share

அக்‌ஷய் குமார் மற்றும் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து தொழில் தொடங்கிய விக்ரம்

சினிமா பிரபலங்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவை தவிர பிற தொழிலில்களில் முதலீடு செய்து பிசினஸ் தொடங்கி வருகின்றனர். சமீபத்தில் தமன்னா நகை தொழில் தொடங்கினார். பின்னர் டாப்சி தன் சகோதரி மற்றும் தோழிகளுடன் இணைந்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யும் தொழில் தொடங்கினார்.

அந்த வரிசையில் தற்போது விக்ரம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து ‘பிக் டீல் டிவி’ என்னும் 24 மணிநேரமும் தொலைக்காட்சி சேனல் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் தொழிலை தொடங்கியுள்ளார். இதன் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. இதில் அக்‌ஷய் குமார், ராஜ் குந்த்ரா மற்றும் விக்ரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் அனைத்து டிடிஎச்சிலும் இந்த சேனலை தமிழகம் முழுவதும் இலவசமாக பார்க்க முடியும். இச்சேனலில் அன்றாட வாழ்க்கைமுறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்,  உடை, உடல் நலம் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவை முதன்மையாக விற்கப்படுகின்றன.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions