கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!

Bookmark and Share

கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!

இப்படத்தின் அனைத்து பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது மேலும் மீதமிருக்கும் பணிகளும் விரைவில் முடிந்து படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற இந்த படம் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு. மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் அனைத்து பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது மேலும் மீதமிருக்கும் பணிகளும் விரைவில் முடிந்து படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் பிரெஞ்ல வெளியான பாய்ண்ட் பிளான்க் படத்தோட அதிகாரப்பூர்வ ரீமேக்கா உருவாகிட்டு வருது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions