உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது – விக்ரமுக்கு ஆதரவாக விவேக் கருத்து!

Bookmark and Share

உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது – விக்ரமுக்கு ஆதரவாக விவேக் கருத்து!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து ஐ படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும் நடிகர் சமுத்திரக்கனியும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது நடிகர் விவேக்கும் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ” நண்பா விக்ரம், “ஐ” காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!”. நடிகர் தனுஷ், ‘ஐ’ பட இயக்குநர் ஷங்கர் ஆகியோர் விவேக்கின் இந்த ட்வீட்டை ரி-ட்வீட் செய்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions