இலவசமாக நடிக்க முடியுமா ? - விசாகா சிங்

Bookmark and Share

இலவசமாக நடிக்க முடியுமா ? - விசாகா சிங்

2008ம் ஆண்டு வெளிவந்த 'பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானாவர் விசாகா சிங். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நாயகியாக நடித்தார்.

அடுத்து 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது 'வாலிப ராஜா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.  தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.  

“அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கதைகளும், சிறப்பான இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. சில சமயங்களில் நல்ல கதாபாத்திரம் கூட அமைவதில்லை.

அதற்கும் மேல் ஒரு படத்தில் நடிப்பதற்கு நியாயமான சம்பளத்தைத் தரக் கூட சிலர் யோசிக்கிறார்கள். பெரிய நடிகை சின்ன நடிகை என்ற வித்தியாசம் பார்க்காமல் சம்பளம் தர வேண்டும்.

புதியவர்கள் என்றால் இலவசமாகக் கூட நடித்துத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை எப்படி செய்ய முடியும். அதனால்தான் பல படங்களை நான் தவிர்த்துள்ளேன், ஆனால் அவற்றை நான் நிராகரிக்கவில்லை,” என விளக்கம் தருகிறார் விசாகா சிங்.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions