விசாகா சிங்கின் ஹாரர் ரவுண்டு!

Bookmark and Share

விசாகா சிங்கின் ஹாரர் ரவுண்டு!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், அதன்பிறகும் அப்பட நாயகன் சேதுவுக்கு ஜோடியாக வாலிபராஜா என்ற படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை.

அதனால் அடுத்தபடியாக ஹீரோயினி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்று கூறிக்கொண்டு படவேட்டையில் ஈடுபட்டவருக்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பட வாய்ப்பு கிடைத்தது.

அதையடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருந்த தனது போட்டோவைப் பார்த்து ஒரு இளைஞர் தவறான கருத்து பகிர்ந்து கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு பெரும் பப்ளிசிட்டியை தேடிக்கொண்ட விசாகாசிங் அடுத்தபடியாக தமிழில் ஒரு ஹாரர் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு சான்ஸ் கிடைத்ததற்கு காரணமே அவரது கண்கள்தானாம். அந்த கண்களைச்சுற்றி அந்த படத்தில் ஒரு கதையே உள்ளதாம்.

அதுமட்டுமின்றி, மாயா படத்தில் நயன்தாரா நடித்திருப்பது போன்று இந்த படத்தின் கதையும் விசாகாவை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறதாம். அதனால் அடுத்தபடியாக ஹாரர் ரவுண்டை அதிரடியான ஆரம்பிக்க உற்சாகமாகிக்கொண்டிருக்கிறார் விசாகாசிங். 


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions