நடிகர் சங்கத் தேர்தல் - விஷால் போட்டி ?

Bookmark and Share

நடிகர் சங்கத் தேர்தல் - விஷால் போட்டி ?

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் குழுவினருக்கும், விஷால் குழுவினருக்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. சரத்குமார் பின்னணியில் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் உள்ளனர்.

விஷால் பின்னணியில் ஆர்யா, ஜீவா, நாசர் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு தனியார் தியேட்டர் நிர்வாகத்திற்கு குறைந்த விலையில் நீண்ட கால குத்தகைக்கு விட விஷால் அணியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் இரு அணியினருக்குமிடையே அடிக்கடி கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'உத்தம வில்லன்' விவகாரத்தில் சரத்குமாருக்கு விஷால் வாழ்த்து தெரித்திருந்தார்.

அதன் பின் விஷால் ஆதரவு நட்சத்திரங்களுக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை. நேற்று விஷால், “இதை நான் கல்லூரியில் முன்னர் செய்திருக்கிறேன், இப்போது மீண்டும்.

அனைத்துமே நல்ல விஷயத்திற்காகத்தான். தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் நேரம் இது,” என மறைமுகமாக நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறாரோ என யோசிக்க வைக்கிறது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் களத்தில் குதித்தால் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions