”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?

Bookmark and Share

”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்துவிட்டதாக விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ”இனி எவனாவது பொண்ணுங்கள நாசம் பண்ணனும்னு நினைச்சா..

தூக்கு தண்டனைதான்னு பயப்படனும்” என படத்தில் வரும் வசனத்தையும் டிவீட் செய்துள்ளார்.தெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றி பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக அயோக்யா வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions