அவன் இவன் படத்திற்க்கு பிறகு என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் மருது : விஷால் பேட்டி

Bookmark and Share

அவன் இவன் படத்திற்க்கு பிறகு என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் மருது : விஷால் பேட்டி

விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘மருது’ படம் வருகிற மே 20-ந் தேதி வெளியாகிறது.

இந்த படம் தெலுங்கில் ‘ராயுடு’ என்ற பெயரிலும் வெளியாகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. 

அதில் விஷால் பேசுகையில், நான் நடித்த ‘சண்டைக்கோழி’ படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள்.

அதேபோல இந்த 'மருது' படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

'அவன் இவன்' படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம். ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப் படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும். 

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன்னுடைய வேலையினை இந்தப் படத்தில் சிறப்பாக செய்துள்ளார். படத்திலேயே வெள்ளையான ஒரு கதாபாத்திரம் நடிகை ஸ்ரீதிவ்யாதான். நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம், அருமையாக நடித்துள்ளார். கதாநாயகன் யாராக இருந்தாலும் இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தினை கண்டிப்பாக எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும் என்று கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions