பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு: நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ்

Bookmark and Share

பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு: நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டமானது நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். 

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் கொண்டுவரும் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லயோலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னத்திரை நடிகர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு தடை கோரிய இந்த வழக்கில் பொதுச் செயலாளர் விஷாலுக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 25-ம் தேதிக்குள் விஷால் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions