நடிகர் விஷால் பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Bookmark and Share

நடிகர் விஷால் பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர் விஷால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

நடிகர் விஷால் பேசியது :- இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன். இது மிகச்சிறந்த மருத்துவ முகாமாகும் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார் விஷால்.

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார்.

நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும் பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ approval வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை , நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.

 


Post your comment





Related News
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions