த்ரிஷ்யத்திற்கு இசையமைக்கிறார் விஷால் பரத்வாஜ்!

Bookmark and Share

த்ரிஷ்யத்திற்கு இசையமைக்கிறார் விஷால் பரத்வாஜ்!

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான விஷால் பரத்வாஜ், சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளரும் கூட. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ஹைடர் படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது.

இதில் இவர் இசையமைத்த ஒரு பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீ-மேக்காகி இப்போது இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.  

அக்ஷ்ய் குமார், ஸ்ரேயா, தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஷால் பரத்வாஜ் இசையமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் கேட்டு கொண்டனர்.

அதன்படி இப்போது அவரும் இசையமைக்க இருக்கிறார். இதனை தயாரிப்பாளர் குமார் மங்காத் உறுதி செய்துள்ளார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் என்றும், அதில் ஒரு பாடலுக்கு விஷால் பரத்வாஜ் இசையமைக்க இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம், ஜூலை 31ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions