நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர்.

கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன.

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளை தொடங்குவது குறித்து முடிவு செய்ய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டமும், நடிகர் சங்க அறங்காவலர்கள் குழு கூட்டமும் சென்னையில் நடந்தது. 

செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, பூச்சி முருகன், குட்டி பத்மினி, உதயா, நந்தா, மனோபாலா, ஹேமச்சந்திரன், அஜய்ரத்னம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வருகிற 31-ந் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மாநகராட்சி அனுமதியை பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் செங்கல் வழங்குகிறார்கள். 


Post your comment

Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்
விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது
நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions