20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!

Bookmark and Share

20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

இவ்விழாவை VFF மேலாளர் முருக ராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க மாநில தலைவர் ஜெயசீலன் ,செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.

துணை நடிகர்கள் சிலருக்கு நடிகர் சங்கம் வேலை கொடுப்பதில்லை என்று ARO சங்கையா போன்றோர் புகார்சொல்கிறார்களே ??

இப்போது திடிரென்று ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் நாங்கள் துணை நடிகர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று. அதில் ஒரு சின்ன திருத்தம் இந்த நடிகர் சங்கம் செயல்படுவது துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வேலை கொடுப்பதற்கு தான். நாங்கள் குருதட்சணை என்னும் திட்டத்துக்கு கீழ் ஓய்வூதியம் கொடுத்து வருகிறோம்.

இதை கிட்டத்தட்ட 16 நாயகர்கள் சேர்ந்து மாதம்2000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் நாங்கள் ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். முன்பெல்லாம் துணை நடிகர்கள் 5 வருடம் 1௦ வருடம் என ரசீதை வைத்து கொண்டு காசே வராமல் அலைந்து வந்தனர்.

தற்போது நாங்கள் தயாரிப்பாளர்களிடம் நீங்கள் அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கொடுத்தால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும் என புரியவைத்துள்ளோம். இப்போது அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைத்து வருகிறது. சர்ச்சைக்கூரிய நபர்கள் தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள்.

துணை நடிகர்கள் அனைவருக்கும் பதவி கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் நாங்கள் எல்லோரும் பதவிக்கு வந்தோம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றார் நடிகர் விஷால்

வாராஹி தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி ??

அவர் ஆதாரத்தோடு அதை நிருபிக்கட்டும் நாங்கள் நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்க்கு அனுமதிக்கமாட்டார் ஏனென்றால் அவர் சிவ குமார் அய்யா குடும்பத்தில் இருந்து வந்தவர் கார்த்தி எங்கள் பொருளாளர்.

இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதை கொண்டு வரட்டும்.

 


Post your comment

Related News
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!
மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!
தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!
சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions