விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால் எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இந்த ‘தூக்கு’ துரை என்ற கேரக்டர் மதுரைக்காரர் என்பதால், மதுரைத் தமிழில் பேசி நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் பாடலாசிரியர் அருண் பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில், ‘எத்தன உயரம் இமயமல, அதில் இன்னொரு சிகரம் எங்க தல...’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. 

இந்த வரியை அருண் பாரதியே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions