ராகுல் பாஸ்கரனை பாராட்டிய விழித்திரு இயக்குனர் மீரா கதிரவன்.!

Bookmark and Share

ராகுல் பாஸ்கரனை பாராட்டிய விழித்திரு இயக்குனர் மீரா கதிரவன்.!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

இப்படம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், '' இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன்.

பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறினர் . தமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால் எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும்.

இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களை கற்றுகொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான்.

கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன். இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு 'விழித்திரு' படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions