போராட்டம், காதல், காமெடி கலந்த படம் விரைவில் இசை!- டைரக்டர் வி.எஸ்.பிரபா

Bookmark and Share

போராட்டம், காதல், காமெடி கலந்த படம் விரைவில் இசை!- டைரக்டர் வி.எஸ்.பிரபா

ஒரு உதவி இயக்குனர், ஒரு இசையமைப்பாளர் இருவரும் சினிமாவில் ஜெயிப்பதற்காக போராடுவதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் விரைவில் இசை. இந்த படத்தை வி.எஸ். பிரபா இயக்கியிருக்கிறார்.

மகேந்திரன் உதவி இயக்குனராகவும், திலீப் ரோசர் இசையமைப்பாளராகவும் நடித்துள்ளனர். அர்பணா, ஸ்ருதிராமகிருஷ்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இந்த படத்தில் முழு காமெடியனாக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து டைரக்டர் வி.எஸ்.பிரபா கூறுகையில்,

சாதாரணமாக சினிமாவில் சாதிப்பதற்கு முன்பு சாப்பாட்டுக்கே அவர்கள் கஷ்டப்படுவது போன்று சொல்லாமல், இலக்கை அடைய அவர் சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.

கதைப்படி, அவர்களுக்கு சான்ஸ் கிடைக்கிறது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில்போது சமூகத்தில் நடக்கிற ஒரு விசயத்தை அவர்கள் கிராஸ் பண்ணுகிறார்கள். அதையடுத்து படப்பிடிப்பு தடைபடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த படம்.மேலும், இந்த படத்துக்கு எம்.எஸ்.ராம் என்ற புதியவர் இசையமைத்துள்ளார். கதையின் சூழலுக்காக அவர் கொடுத்துள்ள 7 பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக வந்திருக்கிறது.

அதில் சினிமாக்காரர்களைப் பற்றி அவர் இசையமைத்திருக்கும் ஒரு பாடல் சினிமா உலகின் தேசிய கீதம் போன்று உள்ளது. இதுபோக, தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கிற, இருக்கப்போகிற உதவி இயக்குனர்களுக்காக ஒரு கவிதை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த கவிதையை உதவி இயக்குனர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.அதோடு, சிலர் சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரர்களை கிண்டல் செய்து படமெடுக்கிறார்கள்.

ஆனால் நான் சினிமாவில் ஜெயிக்க போராடும் ஒவ்வொருவரின் வலியினை உணர்வுப்பூர்வமாக சொல்ல வருகிறேன். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் அனைவருக்குமே பிடிக்கும். அதேசமயம், இந்த படத்தை முழுக்க முழுக்க சீரியசாக சொல்லாமல், காமெடி கலந்தே கதை பண்ணியிருக்கிறேன். அதோடு இரண்டு காதலும் இந்த படத்தில் உள்ளது.ஒரு பெண் தனது காதலன் சினிமாவில் ஜெயிக்க உறுதுணையாக இருப்பாள்.

இன்னொரு பெண்ணோ, உன்னை பிடித்திருக்கிறது. ஆனால் உனது போராட்டம் பிடிக்கவில்லை என்பாள். அவளது காதலனோ, உன்னை பார்த்து 6 மாசம்தான் ஆச்சு. ஆனால் நான் சினிமாவை 15 வருட்சமா காதலிக்கிறேன். என்னோட கனவு லட்சியம் எல்லாமே சினிமாதான். உனக்காக அதை நான் விட முடியாது என்பான்.

இந்த மாதிரி சூழலில், சினிமாவில் எல்லோரும் 40 வயதுக்கு மேல்தான் ஜெயிப்பார்கள் என்று சொல்லிக்கொண்டு 40 வயதுக்கு பிறகு கிராமத்தில் இருந்து வருவார் நம்ம காமெடியன் சஞ்சய் சங்கர். அவரிடத்தில் 40 வயதில ஜெயிக்கனும்னா 18 வயதிலே இருந்து சினிமாவை கத்துக்கனும்.

நீ 40 வயசுலதான் சினிமாவுக்குள்ளே வர்றே. இப்படி வந்தா எத்தனை வயசுல ஜெயிப்பே என்று அவரை இரண்டு ஹீரோக்களும் அவ்வப்போது கிண்டல் செய்வார்கள். அதோடு, கதை சொல்ல செல்லும் இடங்களில் சந்திக்கிற அவமானங்கள். இப்படியாக போராட்டம், காதல், காமெடி என கலந்து இந்த விரைவில் இசை படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் வி.எஸ்.பிரபா.


Post your comment

Related News
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions