12 லட்சம் பேர் பார்த்த என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Bookmark and Share

12 லட்சம் பேர் பார்த்த என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில், சிவகார்த்திகேயன்  - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கும் இரண்டாவது படமான ரஜினி முருகன் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டி. இமான் இசையமைத்துள்ள ரஜினி முருகன் படத்தின் பாடல்களில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற பாடல் சிங்கிள் ட்ராக்காக முதலில் வெளியானது. சிங்கப்பூரில் சிங்கிள் ட்ராக் வெளியான உடனேயே வைரலாக பரவ ஆரம்பித்தது.

மே 29 அன்று இப்பாடலின் மேக்கிங் வீடியோ உடன் இணைந்து பல நட்சத்திரங்கள் தோன்றிய டப்ஸ்மாஸ் வீடியோவும் இணைக்கப்பட்டு ஒரு வீடியோவை யுட்யூபில் பதிவேற்றம் செய்தனர். ஏறக்குறைய மூன்று வாரத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை 12 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இதற்காக ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் பொன்ராமுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இமான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு ஊதா கலரு ரிப்பன் பாடல் அமைந்ததைப் போல், ரஜினி முருகன் படத்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் சிவகார்த்திகேயனுக்கு மச்சம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions