தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கப்பல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். தீபக் மற்றும் நட்சத்திர ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பன்னிரண்டாவது பெயில் என்பதை மறைத்து எம்பிஏ படித்து இருப்பதாக கூறி தமிழை திருமணம் செய்துகொண்டார் சரஸ்வதி. இதனால் அவரது மாமியார் கோதை இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் மீண்டும் அவர்களை வீட்டில் அழைத்து தனியாகவே வைத்திருக்கிறார் கோதை.
இந்த சீரியலில் தமிழில் தம்பியாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவீன். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
இந்த நிலையில் அவரது மனைவி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிங்க பெண்ணுக்கு அப்பாவாகி விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷப்பட்டு உள்ளார் நவீன். இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் நவீனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tamizhum Sarawathiyum Serial Naveen Baby Photo