உலகளவில் இதுவரை கொரோனா நோய் தொற்று 91.86 லட்சம் பேரை பாதித்துள்ளது. 4.74 லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தியாவிலும் 14 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பந்தளா கணேஷ்க்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இதற்கான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்களாம். மேலும் அவருக்கு கொரோனா தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.