Tamilstar
News Tamil News

அட்ஜெஸ்ட் பண்ண முடியுமா! சீரியல், சினிமா நடிகை கல்யாணிக்கு நேர்ந்த கொடுமை!

நடிகை கல்யாணியை மறக்க முடியுமா என்ன. அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபு தேவாவுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின் ஜெயம் படத்திலும் சதாவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த கல்யாணி ஆண்டாள் அழகர் சீரியலும் நடித்திருந்தார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

தற்போது பெங்களூரில் வசித்து வரும் அவர். படங்களில் நடிப்பதில்லை. டிவியிலும் அவரின் முகத்தை காண முடியவில்லை. இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

இந்நிலையில் சினிமா, சீரியலில் நடிக்காததன் பின்னணி என்ன என்பதை கூறியுள்ளார். ஹீரோயினாக கல்யாணி நடிக்கும் போது அவரின் அம்மாவுக்கு போன் வருமாம்.

அதில் ஒரு பெரிய நடிகர், தயாரிப்பாளரின் படம். உங்கள் மகள் தான் ஹீரோயின். ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். என் அம்மா அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என துண்டித்துவிட்டார்.

அதன் அர்த்தம் சில காலத்திற்கு பின் தான் புரியவந்தது. படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான். டிவியில் பணியாற்றிய போது இரவில் பப்புக்கு அழைத்தார்கள். வேண்டாம் மாலையில் காஃபி ஷாப்பில் சந்திக்கலாம் என்றேன். அதன் பின் அவர்கள் என்னை தொடர்புகொள்ளவில்லை என கூறியுள்ளார்.