Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் இணையும் பிரபலம். வைரலாகும் தகவல்

telugu actor join in rajinikanth jailer movie update

கோலிவுட் திரையுலகில் என்றென்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் மீண்டும் ஒரு பிரபல நடிகர் இணைந்து இருப்பதாக புதிய தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.