சூரரை போற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா, தல அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க போகிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு நடிக்கவுள்ள ‘ தல 61 ‘ படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது தெரியவந்துள்ளது.
மேலும் இப்படம் குறித்து முதன் முறையாக அப்டேட் ஒன்றை கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ” அஜித்தை வைத்து சுதா கொங்கரா இயக்கும் படம் இந்தியாவின் மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும். இந்த கூட்டணி நடந்தால் செம்மையாக இருக்கும் ” என தெரிவித்துள்ளார்.
Q: Ajith sir and Sudha Kongara movie nadakuma..?? #AskGV
– @Ajithselvam97— G.V.Prakash Kumar (@gvprakash) September 20, 2020