jவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோமா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அண்மையில் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
2021 பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இப்படம் தள்ளிப்போகும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. அதே வேளையில் அவ்வப்போது படம் குறித்த அப்டேட்ஸ் கொடுத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியிருக்கும் ஆனால் படக்குழு அமைதி காப்பது உற்சாகம் குறைவாகவுள்ளது என தல ரசிகர்களும் புலம்புகிறார்கள்.
தீபாவளிக்காவது ஏதாவது அப்டேட் கொடுங்களேன் என கூறி வருகிறார்கள். இதற்கிடையில் தல ரசிகர்களுக்கு ஓர் விருந்தாய் டிவியில் அஜித் நடித்த பில்லா 2 படத்தை திரையிடுகிறார்களாம்.
Don-க்கு எல்லாம் don, இந்த பில்லாதான்..
Billa 2 | Nov 14 | 10 PM#Billa2 #Billa2OnSunTV #SunTV #SunnoduKondadu pic.twitter.com/FJxxtwXvhU
— Sun TV (@SunTV) November 12, 2020