தல அஜித் செம உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அப்டேட் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல மாதம் ஆகியும் இன்னும் படக்குழு இப்படத்தைப் பற்றி எந்தவித கெடுபிடி இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் தல அஜித் பற்றிய பழைய நினைவுகள் குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கி மகிழ்ச்சி அடைந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் தற்போது கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடிய ஒரு அரிய வீடியோவை திடீரென சமூக வலைதளங்களில் வைரலாக்கி ரசித்து வருகின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
#Thala #Ajith playing Cricket..
Not Latest Video.. It Was Taken at Chennai on 2018..#Valimai #ThalaAjith pic.twitter.com/7Im56pMNYp
— AJITH FANS UPDATES 📰 (@AjithFansUpdate) October 5, 2020