தல அஜித் என்றால் அது தமிழ் சினிமாவில் மாஸ்ஸின் மறுபெயர் என்று அவரின் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், நடித்து வருகிறார் தல அஜித்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர், முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க முடிவு செய்ததையெல்லாம் இந்தியாவிலேயே எடுக்க இப்போது பிளான்கள் போட்டு வைத்துள்ளாராம் தயாரிப்பாளர்.
அஜித்தின் நடிப்பில் வெளிவந்த கடந்த 5 படங்களில் ஒரே ஒரு தோல்வி படம் தான் கொடுத்துள்ளார். மேலும் இதில் விஸ்வாசம் படம் உலகளவில் 187 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை செய்தது. இந்நிலையில் தல அஜித் நடித்து வெளிவந்த கடந்த 5 படங்களுக்கு அவர் வாங்கி சம்பளம் எவ்வளவு என்று இங்கு பார்ப்போம்.
1. வலிமை = ரூ. 50 கோடி
2. நேர்கொண்ட பார்வை = ரூ. 40-50 கோடி
3. விஸ்வாசம் = ரூ. 40-50 கோடி
4. விவேகம் = ரூ. 40-50 கோடி
5. வேதாளம் = ரூ. 40 கோடி
மேலும் இதனை வைத்து பார்க்கும் பொழுது டாப் 3 நடிகர்களிலே ஒப்பிட்டு பார்த்தல், அதில் கம்மியாக சம்பளம் வாங்கும் நடிகர் நம் தல அஜித்குமார் தான்.