தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தல அஜித். முன்னணி உச்ச நட்சத்திரங்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
தல அஜித் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களின் ப்ரோமோஷன் விழாக்களிலும் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டார்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் ” நான் குண்டாகிட்டேன்-னு பலரும் கிண்டலடித்தார்கள். ஆனால் ப்ளீஸ் புரிந்து கொள்ளுங்கள், எனக்கு பல அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ” என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
Edit of the year. #Thala 🔥💔 #Valimai pic.twitter.com/6UrZTNkYc0
— Thangam V19 (@ThangamV19) December 24, 2020