Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவேகம் படம் படைத்த புதிய சாதனை… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Thala Ajith’s Vivegam sets world record

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரத்தில் பல மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்து இருந்தனர். இந்நிலையில், தற்போது 100 மில்லியன் பார்வையாளர்கள் விவேகம் படத்தை பார்த்து இருக்கிறார்கள். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.