சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் பிரபலங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி கவனத்தை பெறுபவர்களாகி விடுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் பற்றிய பேச்சுக்கள் சமூக வளையதளங்களில் ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது. சரி வாங்க இப்போ இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட உள்ள ஜீ தமிழ் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.
மொத்தம் மூன்று ஜீ தமிழ் பிரபலங்கள் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர். ஆமாம் முதல் ஆளாக திருமணமாகி ஒரே வாரத்தில் தல தீபாவளியை கொண்டாட உள்ளார் கார்த்திகை தீபம் தீபா.
இந்த சீரியலில் தீபா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஹர்திகா, கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சில தினங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தார். இதனால் இது அவருடைய காதல் கணவருடன் கொண்டாடும் முதல் தீபாவளி தலை தீபாவளி.
அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரி இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார், மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நளதமயந்தி என்ற சீரியலில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார், இவரும் தல தீபாவளியை கொண்டாட ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய பிரிட்டோ, சந்தியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தலை தீபாவளியை கொண்டாட ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் தற்போதில் இருந்தே தீபாவளி வாழ்த்துக்களை கூற தொடங்கியுள்ளனர்.