எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான் வலிமை படத்தின் First லுக் வரும் மே 1 தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
வலிமை படமே இன்னும் முடிவடையாத நிலையில், அஜித் தனது அடுத்த படத்தை குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
ஆம் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தையும் எச். வினோத்தையே இயக்க சொல்லியுள்ளார் அஜித்.
மேலும் இந்த படத்திற்கு போனி கபூர் தயாரிப்பாளர் என்றும் தல அஜித் முடிவெடுத்துள்ளதாக, பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.