அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
அப்படி, அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி 169 படத்தை இயக்கவுள்ளார் என்று சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் மீண்டும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இணைந்து இயக்கவுள்ள படம் ரஜினி 169.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஜினி 169 படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாயை ராய் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து இதற்கு முன், எந்திரன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரலாறு காணாத ஹிட் ஆனது.