சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து முடித்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக திகழும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் அமிதாபச்சன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதன் பிறகு இப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரம் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சில தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வரிசையில் தற்போது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாஸில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
