Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 170 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?வைரலாகும் பதிவு

thalaivar-170-movie shooting update

லைக்கா புரோடக்ஷனில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நடக்க உள்ள நடிகர்கள் விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.

அதன்படி, இன்று ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இணைவதால் பன்மடங்கு ஆகும் தலைவர் 170 படக்குழுவின் உற்சாகம் என லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவு சமூகவளத்தில் வைரலாகி வருகிறது..