Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிகாரப்பூர்வமாக வெளியான தலைவர் 170 படத்தின் டைட்டில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் லுக் டீஸர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டில‌் டீஸர் வீடியோவும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.