Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 172 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது தலைவர் 172 படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆமாம், தலைவர் 172 திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து முடிந்ததாகவும், மாரி செல்வராஜ் சொன்ன கதை ரஜினிகாந்துக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar 172 latest update
Thalaivar 172 latest update